வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 32 பேர் உயிருலந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
அசாமின் கவுகாத்தி மேகலயாவின் துரா நகரங்களை இணைக்கும் இந்த முக்கிய சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தால் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. சாலை துண்டிப்பால் இரு பகுதிகளிலும் சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. துண்டிக்கப்பட்ட சாலையை சரிசெய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.